Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனுக்கு பித்தம் தெளிய மருந்து கொடுக்க வேண்டும்! – சேரன் ட்வீட்!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (20:01 IST)
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை பார்த்த சேரன் ‘பார்த்திபனின் பித்தம் தெளிய மருந்து கொடுக்க வேண்டும்’ என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பார்த்திபன் தயாரித்து, நடித்து, இயக்கி வெளியான படம் ‘ஒத்த செருப்பு’. வெளியாகி 15 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் பொதுமக்களும், திரை துறையினரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒத்த செருப்பு வெளியானபோது இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் இந்த படத்தை பார்க்கவில்லை.

தற்போது படத்தை பார்த்த சேரன் , பார்த்திபன் ஸ்டைலிலேயே வஞ்சமாய் புகழ்ந்து ட்விட்டரில் பதிவு ஒன்ரை இட்டிருக்கிறார். அதில் அவர் “நீங்கள் ஒற்றை ஆளாய் கிறுக்கிய கவிதை, நீங்கள் இன்னும் சினிமா கிறுக்கனாக இருக்கிறீர்கள் என்பதை பறைசாற்றுகிறது. இந்த பித்தம் தெளிய உங்களுக்கு கீழ்கண்ட மருந்துகள் தேவை. 1. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, 2. சிறந்த நடிகருக்கான தேசிய விருது , 3. காந்தி படம் போட்ட கரண்சி – 1000 மூட்டைகள். இதெல்லாம் இவருக்கு கொடுத்தால் அவரது நோய் பலமடங்காகி இன்னும் அதிகமாக கிறுக்குவார்” என புகழ்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த பார்த்திபன் “உள்ளங்கையால் மறைத்த உதய சூரியன் நீங்கள். ஊர் ஒதுக்கித் தள்ள, உந்தி முந்தி எப்படியாவது வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது! நன்றி!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments