Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்களில் மீண்டும் திரும்பிய சேரன்: கவின் நிலைமை என்ன?

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (09:25 IST)
பிக்பாஸ் வீட்டில் சேரன் சீக்ரெட் அறையில் இருப்பதை வனிதா புத்திசாலித்தனமாக கண்டுபிடித்து விட்டதால் இந்த சஸ்பென்ஸை நீடிக்க விரும்பாமல் பிக்பாஸ் இன்று சேரனை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் காட்சிகள் உள்ளன 
 
பொதுவாக சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டவர்கள் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் போட்டியாளளுக்கு சேரன் கேட்ட கேள்வியால் சந்தேகமடைந்த வனிதா, அவர் வெளியே சென்று இருக்க வாய்ப்பே இல்லை என்று சரியாக யூகித்தார். வனிதா உண்மையை கண்டுபிடித்ததை அடுத்து இந்த சஸ்பென்ஸை மேலும் நீடிக்க விரும்பாமல் சேரனை பிக்பாஸ் அனுப்பி விட்டதாக தெரிகிறது 
 
சேரனை பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்புடன் வரவேற்கின்றனர். குறிப்பாக லாஸ்லியா, ஷெரின், வனிதா, தர்ஷன் ஆகியோர் சேரன் வரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கவினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கவினுக்கு காரசாரமாக கடிதம் எழுதிய சேரன், மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளதால் இது குறித்து கவினுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது சேரன் உள்ளே இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும் சேரன் சீக்கிரமாகவே அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments