Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சென்னை தான் எனக்கு வீடு” – துல்கர் சல்மான்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (11:20 IST)
‘சென்னை தான் எனக்கு வீடு’ என மலையாள நடிகரான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

 
 
மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். 2012இல் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகமான துல்கர், 2014ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘ஓகே கண்மணி’, ‘சோலோ’ என இரண்டு படங்கள் தமிழில் ரிலீஸாகிவிட்டன.
 
துல்கர் பிறந்தது கொச்சியில் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையில்தான் முடித்தார். எனவே, அவருக்கு சென்னை ரொம்பவே  ஸ்பெஷல். நிறைய நேரங்களை சென்னையில் செலவிடவே அவர் விரும்புகிறார்.
 
“சென்னை எனக்கு வீடு மாதிரி. எனக்கு சென்னையில் இன்னும் சொந்த வீடு இருக்கிறது. என் உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர். மலையாளப் படங்களின் ஷூட்டிங்கிற்காக நிறைய நேரம் கேரளாவிலேயே செலவிட வேண்டியிருப்பதால்,  சென்னையை ரொம்பவே மிஸ் பண்றேன். ஷூட்டிங் இல்லையென்றால் போதும். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு  சென்னைக்கு வந்துவிடுவேன்” என்கிறார் துல்கர் சல்மான்.

தொடர்புடைய செய்திகள்

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments