Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது முன்பதிவு – செக்கச் சிவந்த வானம் அப்டேட்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (20:21 IST)
வெள்ளிக்கிழமை வெளியாகும் செக்கசிவந்த வானம் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.


மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லாச் சான்று தொடர்பான பிரச்சனை, சிம்புவின் முந்தைய படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த குற்றச்சாட்டு என பல தடைகளை தாண்டி பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருப்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு காலை ஐந்து மணி சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான முன்பதிவு இன்று துவங்கியது எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments