Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமராஜனின் சாமானியன் படத்துக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:41 IST)
80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்தும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்காமல் நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என அடம்பிடித்து வந்த அவர், இப்போது சாமானியன் திரைப்படம் மூலமாக மீண்டும் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படத்தை தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் மற்ற முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதே தலைப்பை தான் பதிவு செய்து வைத்துள்ளதால், இந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என ஆர்ட் அடிக்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அர்மான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், சாமானியன் என்ற பெயரில் படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments