Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருதி அட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்… நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:27 IST)
அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் முன்பே முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்திருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தை விநியோகித்த வகையில் ராக்போர்ட் முருகானந்தம் தங்களுக்கு 1.4 கோடி ரூபாய் தரவேண்டி உள்ளதாகவும், அதை தராமல் அவர் தயாரித்துள்ள குருதி ஆட்டம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம், படத்தை இப்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று ராக்போர்ட் நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 3 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments