Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் அஞ்சலி நிகழ்வுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (10:52 IST)
நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்கு சக திரையுலகக் கலைஞர்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வரும் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் “அன்பிற்கினிய நண்பர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.  தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைக் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளர். அவருடனான நட்பு எந்தக் காலத்திலும் எத்தகைய அரசியல் சுழலிலும் மாறவே இல்லை. கேப்டன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் மறைவு தமிழகத்துக்கும் திரையுலகிற்கும் பெரிய இழப்பாகும்.

அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

கேம்சேஞ்சர் ரிலீஸ்… ஷங்கரால், தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சிக்கல்!

சூர்யா & R J பாலாஜி இணையும் படத்தின் தொடக்கம் எப்போது?... வெளியான தகவல்!

நாக சைதன்யாவுக்கு கொடுத்த பரிசுகள் எல்லாம் வீண்… மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சமந்தா

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?.. வெளியான சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments