Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலிக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: பிரபல நடிகை டுவீட்!

ஜூலிக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: பிரபல நடிகை டுவீட்!

ஜூலிக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: பிரபல நடிகை டுவீட்!
, வெள்ளி, 21 ஜூலை 2017 (13:02 IST)
நடிகர் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி கலந்து கொண்டார். இதில் தொடக்கத்தில் ஜூலிக்கு இருந்த ஆதரவு தற்போது இல்லை.


 
 
இந்நிலையில் ஜூலியின் நடவடிக்கைகளில் வரவர அதிருப்தியடைந்து வரும் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நேற்று ஜூலி மீது மீண்டும் பயங்கர கோபம் ஏற்பட்டது.
 
நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு புரோ கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியினர் விருந்தினர்களாக வந்திருந்தனர். அப்போது அவர்களை பார்க்க ஜூலி அவசரமாக ஓட முயன்றபோது கீழே விழுந்தார். இதில் அவரது வயிற்றில் கடுமையாக அடிபட்டது.
 
இதனால் ஜூலி ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் கதறி அழுதார். ஆனால் காயத்ரி, நமிதா போன்றோர் ஜூலி நடிப்பதாக கூறி திட்டினர். முன்னதாக விருந்தினர் முன்னிலையிலும் ஜூலி நமிதாவால் அவமானப்படுத்தப்பட்டார்.

webdunia

 
 
இந்த இரண்டு சம்பவம் குறித்தும் ஜூலி ஃபீல் பண்ணி அழுதார். அப்போது ஓவியா தான் ஜூலிக்கு ஆதரவாக அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை தேற்றினார். அவங்க அப்படித்தான் நீ என்ன பண்ணாலும் நடிப்புனு தான் சொல்லுவாங்க கண்டுக்காத என ஆறுதல் கூறினார்.
 
ஆனால் ஓவிய சென்ற பின்னர் கயாத்ரி வந்து ஜூலியிடம் சண்டை போட்ட போது ஓவியா தான் என்னை குழப்பி விட்டுட்டா என ஓவியாவுக்கு எதிராக பேசினார் ஜூலி. இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். தற்போது சமூக வலைதளத்தில் ஜூலிக்கு எதிராக கருத்தும், மீம்ஸும் பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜூலியின் இந்த நடவடிக்கை பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விமர்சித்துள்ளார். ஜூலி ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார். அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த வேலை எல்லாம் இங்க நடக்காது; பாடம் கற்பிக்கும் ஓவியா!