Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு இலங்கையில் இருந்து அழைப்பு… வழிவிடுமா கர்ச்சீஃப் கட்சிகள்?

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (18:27 IST)
‘ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.


 

 
அடுத்த வீட்டுக்காரனாக இருந்தால்கூட, அவனிடமும் ஏதாவது செய்து சுயலாபம் தேடிக் கொள்பவர்கள்தான் அரசியல்வாதிகள். அதுவும் சினிமாக்காரர்களை எதிர்க்கும்போது ஓசியில் விளம்பரம் கிடைக்கிறது என்றால் விட்டுவிடுவார்களா? போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிய லைக்கா நிறுவனம், அந்த வீட்டின் சாவியை ரஜினி கையால் கொடுக்கவைக்க நினைத்தது. ரஜினியும் ஒத்துக் கொண்டார். ‘அதெப்படி அவர் இலங்கை போகலாம்?’ என்று ஆஃப் சீஸன் கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ரஜினியும் பயணத்தை கேன்சல் செய்தார்.
 
இப்படித்தான் இலங்கையில் கச்சேரி நடத்த இளையராஜாவுக்கு அழைப்புதான் வந்தது. உடனே இளையராஜா வீட்டின் முன்பு கொடிபிடித்து, கோஷம் போட்டனர். அவரும் அந்தக் கச்சேரியை நடத்தவில்லை. இப்போது, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரே, ‘ரஜினி விரும்பினால் இங்கு வரலாம்’ என அழைப்பு விடுத்திருக்கிறார். இப்போதாவது அவர் இலங்கை செல்ல துண்டு, துக்கடா கட்சிகள் குறுக்கே கட்டையைப் போடாமல் இருக்குமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!

திரையரங்குகள் கட்டணம் உயர்கிறதா? தமிழக அரசுக்கு வைத்த ஐந்து கோரிக்கைகள்..!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு..!

மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments