Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாய்காட் கேப்டன் மில்லர்… சமூகவைதளத்தில் திடீரென பரவும் ஹேஷ்டேக்- பின்னணி என்ன?

vinoth
திங்கள், 5 பிப்ரவரி 2024 (14:40 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்தது. ஆனால் படத்தின் மீதான கலவையான விமர்சனம் காரணமாக வசூல் பாதிப்படைந்தது. மொத்தத்தில் இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபம் பெற்றுத் தரவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இந்தி மொழியில் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியில் வெளியாக வேண்டுமென சமூகவலைதளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருசிலர் மேலும் கோபமாகி “பாய்காட் கேப்டன் மில்லர்” என்ற ஹேஷ்டேக்கையும் பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments