Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக சார்பாக போட்டியிட விண்ணபித்த நடிகர் போஸ் வெங்கட்!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:28 IST)
நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.

மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வெங்கட் அதன் பின்னர் போஸ் வெங்கட் என்றே அழைக்கப்பட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் அவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த ஆண்டு கன்னிமாடம் என்ற படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குனராகவும் அறியப்பட்டார்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் பேசிய அவர் ‘சில தேர்தலாக இந்த தொகுதியை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. இந்த ஆண்டு திமுகவே நிற்கவேண்டும். கட்சி தலைமை விருப்பப்பட்டால் நான் தேர்தலில் நிற்பேன். ஒருவேளை நான் வெற்றிபெற்றால் நான் ஐந்து ஆண்டுகளும் சினிமாவில் நடிக்காமல் சென்னைக்கே செல்லாமல் தொகுதிக்காக பாடுபடுவேன்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments