Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மானமும் அறிவும்தான் மனுஷனுக்கு அழகு’… எப்படி இருக்கு விமலின் ‘சார்’ டிரைலர்!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2024 (14:04 IST)
தமிழ்  சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக அறியப்படுபவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமான இவர் அதில் நடித்த போஸ் என்ற கதாபாத்திரத்தின் காரணமாக போஸ் வெங்கட் என அறியப்பட்டார். அந்த சீரியல் அவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்த நிலையில் அதன் பிறகு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

தலைநகரம், சிவாஜி, கவன் ஆகியவை அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற படத்தின் மூலம் போஸ் வெங்கட்  இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து அவர் இப்போது விமல் கதாநாயகனாக நடிக்கும் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. பள்ளிக்கூட வாத்தியாராக செல்லும் விமல், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்படும் பிரச்சனைகளும் அதை எதிர்த்து அவர் போராடுவதும் கதையாக இருக்கும் என்பதை இந்த டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்…!

இளைஞர்களைக் குறிவைக்கும் பிரதீப்பின் ‘டிராகன்’ படக்குழு!... காதலர் தினத்தில் ரிலீஸ்!

ஷூட்டிங் முடிந்தாலும் ரிலீஸ் அடுத்த வருடம்தானா?... தள்ளிவைக்கப்படும் தக் லைஃப்!

என்ன சந்தீப் கிஷனும் இல்லையா… ஜவ்வாக இழுக்கும் சஞ்சய்யின் படம்!

சுதா கொங்கரா & சிவகார்த்திகேயன் படம் தொடங்குவதில் சிக்கல்… சூர்யாதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments