Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் கனவுக்கன்னி நடிகை அலியா பட் பிறந்த தினம் இன்று

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (14:35 IST)
பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் 1993ம் ஆண்டு மார்ச் 15ம்தேதி இதே நாளில் தான் பிறந்தார்.
இவர் பிரபல இயக்குனர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஷ்டானின் மகள் ஆவார். குழந்தை நட்சத்திரமாக 1999ம் ஆண்டு சங்கார்ஸ் என்ற திரில்லர் படம் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார். கரன் ஜோக்கரின் ஸ்டூடன் ஆப் தி இயர் படம் மூலம் 2012ம் ஆண்டு ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2 ஸ்டேட்டஸ் (2014), ஹம்டி சர்மா ஹி துல்ஹனியா(2014),  பத்ரிநாத் கே துல்ஹனியா (2017); கபூர் & சன்ஸ் (2016);  மற்றும் டியர் ஜிண்டகி (2016) படங்களில் நடித்தார். இந்த படங்கள் மூலம் பாலிவுட்டில் ரொமன்ஸ் நாயகியாக மாறினார். 
 
2014ம் ஆண்டு ஹைவே படத்தில் நடித்ததுக்காக சிறந்த நடிகைக்கான பில்ம் பேர் கிரிட்டிக்ஸ் விருதினை அலியா பட் வென்றார்.  இவர் 2016ம் ஆண்டு உத்த பஞ்சாப் படத்தில் நடித்ததுக்காக சிறந்த நடிகைக்கான பில்ம்பேர் விருதினை வென்றார். அலியா பட்  கதை நாயகியாக வடிது  2018ம் ஆண்டு வெளியான ஸ்பை திரில்லர் படமான raazi திரைப்படம், பாலிவுட்டில் வசூலில் பெரும் சாதனை படைத்தது. இதேபோல் இந்த ஆண்டு வெளியான குல்லி பாய் திரைப்படமும் வசூலில் சக்கைபோடு போட்டது. 
தற்போது ராஜமௌலியின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க உள்ளார். இதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக மாற உள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

عليا بهات تحتفل بعيد ميلادها 26 مع العائلة والاصدقاء

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments