Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் அடுத்த பட டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (17:05 IST)
’ஜோக்கர்’ என்ற படத்தில் நடித்திருந்தாலும் யாருக்குமே தெரியாதவராக இருந்த ரம்யா பாண்டியன் ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் உலகப் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் மிகவும் புத்திசாலித்தனமாக பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ’எவிக்சன் பாஸ்’ சுரேஷூக்கு கிடைக்காமல் செய்தது அவரது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியது
 
இந்த நிலையில் ரம்யா ஏற்கனவே ஒரு வெப்தொடரில் நடித்து முடித்துள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில் இந்த தொடர் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு ‘முகிலன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இதுவொரு ஆக்சன் கேங்ஸ்டர் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
செம்பருத்தி தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் தான் இந்த தொடரின் ஹீரோ என்பதும் அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ராம் ராம் என்பவர் இயக்கியுள்ள இந்த தொடர் அக்டோபர் 30ஆம்தேதி முதல் ஜீ5 பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments