Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேமராவை பார்த்து கோபத்துடன் பேசும் ஜூலி!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (15:06 IST)
பிரபல தொலைக்காட்சி நடத்திவரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி கலந்துகொண்டுள்ளார். 15 சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டதில் ஜூலி ஒருவர் மட்டும்தான் சினிமா பிரபலம் அல்லாதவர்.

 
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் தொடக்கம் முதலே ஜூலியோடு உடன் இருந்தவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.  சில நாட்கள் முன்பு காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி இடையே சிறிய மனகசப்பு இருந்தது. அது தற்போது பெரிய சண்டையாக  மாறி உச்சத்தை தொட்டுள்ளது. 
 
ஜூலி பேசுகையில் உங்களை போல டிஆர்பிக்காக என்னால் நடிக்க முடியாது என ஜூலி சொல்ல, அது காயத்ரி ரகுராமுக்கு அதிக கோபத்தை வரவழைத்துவிட்டது. பின்னர் ஒரு பெரிய வாய் சண்டையானது. இன்றைய நாள் தொடர் முடிவடைந்ததை அடுத்து ஒளிப்பரப்பட்ட நாளைய நாளுக்கான ப்ரமோவில் ஜூலியை நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் வரிந்து கட்டிகொண்டு சண்டை போடுவதுபோல் காட்டியுள்ளனர். அதற்கு காயத்ரி ரகுராம் என்ன குளிர் விட்டு போச்சா, எலிமினேஷன் முடிஞ்சிடுச்சின்னு ஆடுறியா என கோபத்துடன் பேசுகிறார்.
 
இதனை தொடர்ந்து மனமுடைந்த ஜூலி வெளியில் உள்ள கேமராவை பார்த்து "நான் இப்பவே வீட்டுக்கு போயாகனும், ஏதாவது  பண்ணுங்க. நான் போய் திங்ஸ் ரெடி பண்றேன்" என கண்ணீருடன் கூறிவிட்டு கோபமாக சென்றார். எனவே ஜூலி பிக் பாஸ்  நிகழ்ச்சியை வெளியேறிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments