Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி கட்டிபிடித்து பெயரை கெடுத்துகொண்ட ஜூலி!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (12:58 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஒரு போட்டி, ஆட்டம் பாட்டம் என செம ஜாலியாகவும், அவ்வப்போது சண்டை, அழுகை என விறுவிறுப்பாக செல்கிறது. ஆரம்பத்தில் ஜூலிக்கு மக்கள் ஆதரவு கொடுத்தாலும், தற்போது மோசமான போட்டியாளர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் கூறினார் ஜூலி. அதிலிருந்தே அவரை வெறுக்க தொடங்கினர் ரசிகர்கள். இதைத்தொடர்ந்து சக போட்டியாளர்கள் குறித்து பின்னால் சென்று பேசுவது, அழுதே காரியத்தை சாதிப்பது என அனைத்து விஷயங்களிலும் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் ஜூலி. போதா குறைக்கு சக ஆண் போட்டியாளர்களை காரணமே இல்லாமல் கட்டிப்பிடித்து வருகிறார்.

 
நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலி நடிகர் சக்தியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஏற்கனவே அடிக்கடி கவிஞர் சினேகனை பலமுறை கட்டிபிடித்தார். மேலும் சக போட்டியாளர்கள் குறித்து அவர்களுக்கு பின்னால் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆரம்பத்தில் வம்பிழுத்த காயத்ரியிடமே கூட்டணி வைத்துகொண்டு ஓவியாவையும், நமீதாவையும் தரக்குறைவாக பேசி  வருகிறார் ஜூலி. 
 
ஜூலியின் இந்த நடவடிக்கையால், மக்கள் அவரை மோசமான போட்டியாளர் என சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி  கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments