Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 5வது சீசனின் புதிய காதல் ஜோடி இவர்கள்தானா?

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (06:59 IST)
பிக்பாஸ் 5வது சீசனின் புதிய காதல் ஜோடி இவர்கள்தானா?
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம்
 
கடந்த சீசனில் பாலாஜி-ஷிவானி, மூன்றாவது சீஸனில் கவின் - லாஸ்லியா ஆகியோர் காதலித்து வந்ததாகவும், இவர்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே 
 
அதேபோல் முதல் சீசனில் ஓவியா - ஆரவ் காதல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா காதலும் இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் 5 வது சீசனில் அபிஷேக் மற்றும் பவானி ரெட்டி காதல் ஜோடிகளாக வருமா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது
 
நேற்றைய எபிசோடில் பவானி ரெட்டியின் மடியில் அபிஷேக் படுத்துக் கொள்ள அவருடைய தலையை பவானி ரெட்டி பிடித்து விட்டார். இது மற்ற போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அபிஷேக் ராஜா மற்றும் பவானி ரெட்டி ஆகிய இருவருமே தனித்தனியாக தங்களது இணையை விவாகரத்து செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.,
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments