Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றுதான் - கே. பாக்கியராஜ் ஓப்பன் டாக்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:54 IST)
செங்கோல் கதையும், சர்கார் பட கதையும் ஒன்றுதான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியாகவுள்ள சர்கார் படக்கதை தன்னுடையது என ராஜேந்திரன் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் புகார் கொடுத்தார். 
 
ஆனால், இது தரப்பு பேச்சுவார்த்தையிலும் உடன் பாடு ஏற்படவில்லை. எனவே, ராஜேந்திரன் மற்றும் முருகதாஸ் இருவரும் நீதிமன்றத்தை நாடுவது என முடிவெடுத்தனர். இந்த வழக்கில் வருகிற 30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், செங்கோல் படக்கதையும், சர்கார் படக்கதையும் ஒன்றுதான். ஆனால், ராஜேந்திரனுக்கு முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம். உங்கள் பக்க நியாயத்திற்காக நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு செல்வத தடுக்க மாட்டோம்” என பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கை இன்று மாலை லீக் ஆனது.

 
இந்நிலையில், இது தொடர்பாக செய்தி சேனலுக்கு பேட்டியளித்த கே.பாக்யராஜ் “எங்கள் குழு ஆராய்ந்ததில் 2007ம் ஆண்டு ராஜேந்திரன் பதிவு செய்த செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான் என உணர்ந்தோம். இதை வெளியே கூறாமல் சுமூகமாக பேசி தீர்க்கலாம் என முடிவு செய்தேன். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ராஜேந்திரன், முருகதாஸ் இருவருமே நீதிமன்றத்தில் செல்வதில் உறுதியாக இருந்தனர். எனவே, எங்களால் உதவ முடியவில்லை. இது தொடர்பான அறிக்கைதான் எப்படியோ வெளியாகி விட்டது” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments