Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்விஜய்-அறிவழகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Webdunia
ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (19:20 IST)
ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அதன் பின்னர் வல்லினம், ஆறாவது சினம், குற்றம் 23’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ என்ற திரைப்படம் நல்ல ஹிட்டாகியதை அடுத்து தற்போது மீண்டும் இருவரும் ஒரு  ஆக்‌ஷன் கலந்த ஒரு திரைப்படத்திற்காக இணையவுள்ளனர்.
 
அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்க இருக்கும் இந்த படத்தில் மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல குணசித்திர நடிகர் பகவதி பெருமாள் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜசேகர் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
 

இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இம்முறையும் ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் கலந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க இயக்குனர் அறிவழகன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments