Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெல்பாட்டம் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவுதானா? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (19:30 IST)
அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலங்களில் இதுவரை 915 திரையரங்குகள் முன்பதிவு செய்துள்ளன. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு வெளியாகும் மிகப்பெரிய படமாக பெல்பாட்டம் நேற்று ரிலிஸானது. ஆனால் அதன் வசூலோ எதிர்பார்த்தபடி இல்லையாம். இந்தியா முழுவதும் இருந்து முதல் நாளில் 2.5 கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அக்‌ஷய் குமாரின் படங்களின் முதல்நாள் வசூல் 30 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments