Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் ஜோடியாகும் பானு

Webdunia
சனி, 24 ஜனவரி 2015 (11:26 IST)
தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பானு. குடும்பப் பிரச்சனை காரணமாக அவரது சினிமா கரியர் சூடு பிடிக்கவில்லை. பிரச்சனைகளை செட்டில் செய்து அவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய போது காலம் கடந்துவிட்டிருந்தது. கடைசியாக அவர் நடித்த உருப்படியான படம் என்றால் மூன்று பேர் மூன்று காதல்.
அதன் பிறகு படங்கள் இல்லாத நிலையில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா நடிக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பானுவை ஒப்பந்தம் செய்திருப்பதாக ராஜேஷ் கூறியுள்ளார்.
 
இதற்கு முன் காதல் சந்தியா சந்தானத்தின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

Show comments