அதர்வா நடிப்பில் சற்குணம் சண்டிவீரன் படத்தை இயக்கியிருக்கிறார். எனினும் இவர்கள் பெயரைவிடுத்து, படத்தை தயாரித்த பாலாவின் பெயரிலேயே படம் அறியப்படுகிறது. தப்பில்லை, படத்தின் வியாபாரம் பாலாவின் பெயரை வைத்துதான் நடந்திருக்கிறது.
நய்யாண்டியில் சற்குணம் பெரிதாக கோட்டைவிட்ட நேரம், பாலாவே முன்வந்து இந்த வாய்ப்பை சற்குணத்துக்கு வழங்கினார். அதர்வா சம்பளம் தவிர்த்து மூன்று கோடியில் படத்தை முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த மூன்று கோடிக்குள்தான் படத்தின் செலவுகள், நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரின் சம்பளமும். சற்குணமும் இந்த மூன்று கோடிக்குள்தான் தனது சம்பளத்தை எடுத்தாக வேண்டும்.
ஒரு பாடல் தவிர்த்து மற்ற காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் மூன்று கோடிகள் செலவழித்த தயாரிப்பாளர் பாலா, படத்தை ஒன்பது கோடிக்கு ஒரு நிறுவனத்துக்கு விற்றுள்ளதாக தகவல். பிசாசு படத்தைவிட சண்டிவீரனின் லாபம் அதிகம்.
பெயரை வைத்து சம்பாதிப்பதை பாலாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.