Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவின் சண்டிவீரன் படத்தின் உரிமையை வாங்கிய ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (15:11 IST)
பிசாசு படத்தை தயாரித்த பாலா, சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வந்தார். சண்டிவீரன் என அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
பாலாவின் பி ஸ்டுடியோஸ் பிசாசு படத்தை தயாரித்து லாபம் பார்த்தது. அதில் பாலாவின் பங்களிப்பு மிகக்குறைவு. பிசாசுவை, முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து தரும் பொறுப்பை மிஷ்கினிடம் ஒப்படைத்தார். அதனால் பணம் மட்டும் தந்தால் போதும், தயாரிப்பு தலைவலிகள் கிடையாது. பர்ஸ்ட் காப்பி தயாரானதும் அதனை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸுக்கு விற்றார். அதனால் வெளியிடும் தலைவலியும் இல்லை. இந்த கைமாற்றிவிடுவதில் சில கோடிகள் அவருக்கு கிடைத்தது.
 
அதேபாணியில் சண்டிவீரனும் தயாராகியிருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாராகும் முன்பே ஸ்ரீகிரீன் நிறுவனம் சண்டிவீரனின் தமிழக, கேரள மற்றும் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. 
 
விரைவில் சண்டிவீரனின் பாடல்களை வெளியிட உள்ளனர்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments