Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 ஒதுங்கியதால் ஆகஸ்ட்ர் 15 ரிலீஸ் ரேஸில் இறங்கியுள்ள பாலாவின் வணங்கான்!

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (16:10 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்நிலையில் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அந்த தேதியில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அந்த தேதியை வணங்கான் குறிவைத்துள்ளது. அதே தேதியில் விக்ரம்மின் தங்கலான் திரைப்படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments