Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவின் தாரை தப்பட்டையுடன் பொங்கலை கொண்டாடுங்கள்

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (12:58 IST)
வருகிற பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா சர்க்கரைப் பொங்கலாக இருக்கப் போகிறது. கதகளி, மிருதன், 24, இது நம்ம ஆளு, அரண்மனை 2 ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் நிலையில், பாலாவின் தாரை தப்பட்டையும் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


 
 
சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் கரகாட்ட கலையை மையமாக வைத்து இந்தப் படத்தை பாலா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல படத்தில் நடித்தவர்களுக்கு சுளுக்கெடுத்திருக்கிறார் பாலா. சண்டைக் காட்சியில் நடித்த சசிகுமாரின் கை எலும்பு முறிந்தது. கழுத்து சுளுக்கிக் கொண்டது. இன்னும் பல அதிபயங்கர அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். வரலட்சுமிக்கும் இது போன்ற சித்ரவதை ட்ரீட்மெண்ட் அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
 
இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
தமிழ் சினிமாவுக்கு வரும் பொங்கல் மறக்க முடியாத பெரும் பொங்கலாக இருக்கப் போகிறது.

சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்ன சுதா கொங்கரா!

மாஸா? தமாஸா?.... மைக் மோகனின் ஹரா டிரைலர் எப்படி?

வாடிவாசல் படத்தை வெற்றிமாறனுக்கு முன்பே சூர்யாவை வைத்து இயக்க ஆசைப்பட்ட பிரபல இயக்குனர்…!

ஜூலை இறுதியில் விக்ரம்மின் தங்கலான் ரிலீஸ்… படக்குழு எடுத்த முடிவு!

"நாட்டாமை" திரைப்படத்தில் இடம் பெற்ற மிச்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது - இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்!

Show comments