Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியே சொல்ல முடியாத ரஜினியின் பாராட்டு

Webdunia
திங்கள், 20 ஜூலை 2015 (20:39 IST)
ராஜமௌலிக்கும், ரஜினிக்கும் உள்ள பந்தம் நாடறிந்தது. பாகுபலிக்கு ரொம்ப காலம் முன்பே ராஜமௌலியை வியந்து பாராட்டியவர், ரஜினி. அதேபோல் ராஜமௌலியும். ரஜினிக்கு அவர் தரும் மரியாதை, மற்ற அனைவருக்கும் தருவதைவிட கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
 
பாகுபலி படம் நிறைவடைந்த நேரத்தில், இந்தப் படத்தை யாருக்கு முதலில் திரையிட்டு காட்ட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, படத்தின் நாயகி அனுஷ்காவும், நாயகன் பிரபாஸும் சொன்ன பதில், ரஜினிகாந்த். ராஜமௌலியிடம் கேட்டிருந்தாலும் இதே பதில்தான் கிடைத்திருக்கும்.
 
பாகுபலி குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை அறிய அனைவருக்கும் ஆர்வம். ஆனால், அதை மட்டும் ராஜமௌலி வெளியிடாமலே இருக்கிறார். பொறுத்துப் பார்த்து அதனை கேட்டும் விட்டார்கள். பாகுபலிக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு யாருடையது?
 
சந்தேகமில்லாமல் ரஜினியுடையதுதான் என்ற ராஜமௌலி, ஆனால், அவர் என்ன சொன்னார் என்பது என்னுடனே இருக்கட்டும் என, ரஜினி என்ன சொன்னார் என்பதை கூற மறுத்துவிட்டார்.
 
பாகுபலி படத்தைவிட இது சுவாரஸியமாக இருக்கும் போலிருக்கே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

Show comments