Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் கின்னஸ் சாதனைப் படைத்த பாகுபலி போஸ்டர்

Webdunia
புதன், 1 ஜூலை 2015 (09:50 IST)
வெளியாகும் முன்பே கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது, பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ஜுலை 10 வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். ஜப்பானிலும் படம் வெளியாவதாக தகவல்.
கேரளாவிலும் பாகுபலி ஜுலை 10 வெளியாகிறது. கேரளாவில் பாகுபலியின் விநியோக உரிமையை குளோபல் யுனைடெட் மீடியா வாங்கியுள்ளது. இவர்கள் படத்தை விளம்பரப்படுத்தும்விதமாக பாகுபலி போஸ்டர் ஒன்றை கொச்சியில் உருவாக்கினர். ஒரு பெரிய மைதானத்தை முழுமையாக எடுத்துக் கொண்ட இந்த போஸ்டர் கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.
 
கின்னஸில் இடம் பெற்றிருக்கும் மிகப்பெரிய போஸ்டரின் அளவு, 5,0687.25 சதுர அடிகள். பாகுபலி போஸ்டர் அதைவிட பெரிது. 51,968.32 சதுர அடிகள். 
 
படம் வெளிவந்தால் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments