Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழுக்கு வரும் அய்யப்பனும் கோஷியும் – யார் நடித்தால் நன்றாக இருக்கும் ?

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (09:15 IST)
மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் கதாபாத்திரங்களில் அஜித்தும் கமலும் அல்லது அஜித்தும் ரஜினியும் நடித்தால் நன்றாக இருக்கும் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments