Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்து கூறிய ஆஸ்திரேலிய வீரர்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:15 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது.

உலகம் முழுவதும்  வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற புஷ்பா படத்தில்  2வது பாகம்  திரைப்படம்  பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மத்திய பாஜக அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புஷ்பா படத்தில் நடித்ததற்காக  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு சினிமாவின் முதல் தேசிய விருது  பெற்ற  நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில்,  பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன் இஸ்டாகிராமில்  நடிகர்  அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர், தன் சமூக வலைதள பக்கத்தில்,  புட்டபொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, புஷ்பா பட சாயலில் வீடியோக்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments