Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதில் கூடவா காப்பி பேஸ்ட்? அட்லியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (16:37 IST)
இயக்குனர் அட்லி, இன்று ஆசிரியர்கள் தினத்தை அடுத்து தனது தொழில் கற்று கொடுத்த ஆசிர்யர் இயக்குனர் ஷங்கரை பாராட்டும் வகையில் ஒரு டுவீட்டை இன்று பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ஆசிரியர் தினம் என்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் தான் வரும். ஆனால் நீங்கள் கற்று கொடுத்த பாடம் எனக்கு தினம்தினம் ஞாபகம் வந்து என்னை பெரிய ஆளாக்கியுள்ளது. உங்களை குருவாக பெற்றதில் பெருமைப்படுகிறேன் என்று ஒரு ஆங்கில பதிவை தனது டுவிட்டரில் அட்லி பதிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த பதிவை நேற்றே ஒரு டுவிட்டர் பயனாளி பதிவு செய்துள்ளார். அச்சு அசலாக ஒரு எழுத்து கூட மாறாமல் அட்லி அதை காப்பி பேஸ்ட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அட்லி இயக்கிய 'ராஜா ராணி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' திரைப்படங்கள் 'மெளனராகம், .'சத்ரியன்' மற்றும் 'அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களை காப்பியடித்து எடுத்ததாக விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் ஒரு டுவீட்டை கூட சொந்தமாக போட முடியாதா? என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments