Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட் பிரபுவோடு விண்டேஜ் புகைப்படத்தப் பகிர்ந்த அசோக் செல்வன்… emotional பதிவு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (09:37 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள மன்மத லீலை திரைப்படம் நேற்று வெளியானது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் நேற்று வெளியானது.

இதையடுத்து படத்தின் ஹீரோ அசோக் செல்வன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘நான் 2010 ஆம் ஆண்டு உதவி புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயக்குனர் வெங்கட்பிரபுவை சந்திக்க நேர்ந்தது. அப்போது நான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் எனக்கு பிடித்த வெள்ளை சட்டையை அணிந்துகொண்டு பற்கள் எல்லாம் தெரிய சிரித்துக்கொண்டு அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன் ‘ஒருநாள் நான் அவரோடு பணியாற்றுவேன்’ என்று.  இப்போது 2022-ல் நான் அவரோடு மன்மதலீலை படத்தில் பணியாற்றியுள்ளேன். கனவுகள் நிஜமாகியுள்ளன.’ எனக் கூறி வெங்கட்பிரபுவோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments