Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான தினத்தில் பாடலை வெளியிட்ட பா ரஞ்சித்.. அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் இன்ப அதிர்ச்சி..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (16:42 IST)
நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் நடந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த படத்தின் சிங்கிள் பாடலை பா ரஞ்சித் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். 
 
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம்  ’ப்ளூ ஸ்டார்’. இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலை சற்றுமுன் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 
 
திருமண நாளில் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்த பாடலை வெளியிட்டு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்