Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 வயசுல பண்ற வேலையா இது? இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்ற வில்லன் நடிகர்!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (20:20 IST)
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான ஆஷிஷ் வித்யார்த்தி பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
 
இதனிடையே அண்மையில் தன்னுடைய 60 ஆவது வயதில் ரூபாலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் பதிவு திருமணமாகவும், சிறிய குடும்ப நிகழ்வாகவும் நடந்தது. ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ராஜோஷி பருவாவை முதல் திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துக்கொண்டார். தற்போது மனைவியுடன் புதுவாழ்வு வாழ்ந்து வரும் ஆஷிஷ் ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?

ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

2024 ஆம் ஆண்டில் தனக்குப் பிடித்த படமாக இந்திய படத்தைத் தேர்வு செய்த ஒபாமா!

அடுத்த கட்டுரையில்
Show comments