Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனிமி படத்தின் படப்பிடிப்பில் காயமான ஆர்யா! மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:02 IST)
நடிகர் ஆர்யா எனிமி படத்தின் சண்டைக் காட்சியின் போது கையில் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முதல் கட்டமாக நடந்து முடிந்தது. அதன் பின்னர் இப்போது சென்னையில் ஆர்யா மற்றும் விஷால் மோதும் சண்டைக் காட்சிகளை இயக்குனர் படமாக்கி வந்தார். அப்போது ஆர்யாவுக்கு கையில் அடிபடவே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டார். ஆனால் காயம் பெரிய அளவில் இல்லை என்பதால் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments