Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அருண் விஜௌ படம்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (15:13 IST)
தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ரெட் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தடம். குற்றம் - திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அருண் விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக தடம் அமைந்தது. அந்த படத்தை பார்த்து ரசித்த நடிகர் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கதை கேட்டுள்ளார். அந்த படத்தின் வெற்றியால் நீண்ட நாட்களாக தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்த அருண் விஜய் வரிசையாக படங்களில் கமிட் ஆகிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் என்ற பெயரில் உருவாகியுள்ளது. தெலுங்கு நடிகரான ராம் பொத்தானி நடித்துள்ளார். காவல் துறை அதிகாரி வேடத்தில் நிவேதா பெத்துராஜ் மற்றும் பிகில் புகழ் அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தியிலும் இந்த படம் இப்போது ரீமேக் ஆக உள்ளது. அதில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் ஆதித்யராய் கபூர் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments