Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதற்குள் ரசிகர் மன்றமா? அசத்தும் அருள் சரவணன்

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (21:00 IST)
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. அஜித் விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி என்பவரின் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது
 
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 100 கோடி என்றும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் பிரபல நடிகர் நடிகைகளுடன் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும் திரைப்படத்தில் நடிக்க முடிவு எடுத்ததும் அருள் சரவணன் நடிப்பு பயிற்சி கல்லூரிக்குச் சென்று முறைப்படி நடிப்பை பயின்றதாகவும், அதன்பின்னரே அவர் படம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. சென்னையின் ஒரு சில சாலைகளில் ’உழைப்பால் உயர்ந்த கதாநாயகன் அருள் சரவணன்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
முதல் படம் வெளியாகும் முன்னரே ஒரு சிலருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே ரசிகர் மன்றம் ஆரம்பித்திருப்பது அனேகமாக உலகிலேயே அருள் சரவணன் ஒருவருக்காக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments