Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 மில்லியன் வியூஸ்…தென்னிந்திய சினிமாக்களிலேயே அரபிக்குத்து மட்டும்தான்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (20:45 IST)
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது.  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. இதைத் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் இன்று அந்த பாடல் 120 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. தென்னிந்திய சினிமாக்களிலேயே குறைந்த நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது அரபிக்குத்து பாடல் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments