Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் நடித்த அதே 'வாலி' கேரக்டர்: அனுஷ்கா பெருமிதம்

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (21:14 IST)
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'வாலி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் ஒரு வேடம் காது கேட்காத, வாய் பேச முடியாத வில்லன் வேடம். இந்த கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றளவும் அஜித் சிறப்பாக நடித்த கேரக்டர்களில் ஒன்று இந்த கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 'பாகுபலி' புகழ் அனுஷ்கா, அஜித் நடித்த அதே காது கேளாத, வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்து வருகிறார். 'தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் 'சைலன்ஸ்' என்ற படத்தில் தான் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத தொழிலதிபர் கேரக்டரில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில், அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிப்பது தமக்கு பெருமையாக உள்ளது என்று நடிகை அனுஷ்கா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஒரு ஆண்டாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா தற்போது 'சைலன்ஸ்' தவிர, சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்மரெட்டி' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments