Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளாரா ஆண்ட்ரியா!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (15:42 IST)
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்துள்ளாராம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சில முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கும் போது ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாக இயக்குனர் மிஷ்கின் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளாராம். ஆனால் படத்தின் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்றுதான் அப்படி நடந்துகொண்டார் என்பதால் ஆண்ட்ரியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில் மிஷ்கின் இப்படி மன்னிப்புக் கேட்டதற்குக் காரணமாக படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைத்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் கதைக்கு அது முக்கியம் என்பதால் ஆண்ட்ரியாவும் நடித்துக் கொடுத்துள்ளாராம். மேலும் அந்த காட்சிகள் விரசமாக இல்லாதபடி உருவாக்கியுள்ளனராம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்