Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர்களே தயாராக இருங்க… இனி அதிரடிதான்… பிரசாந்த் கொடுத்த அப்டேட்!

vinoth
புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:10 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸானது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்து, சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். அந்த  நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி ஆகிய படங்களின் வருகையால் இன்னும் கூடுதல் வசூலை ஈட்ட முடியாமல் போனது.

இந்நிலையில் இனிமேல் வருடத்துக்கு நான்கு படங்களில் பணியாற்ற உள்ளதாக பிரசாந்த் கூறியுள்ளார். அதில் “முன்னணி இயக்குனர்கள் என்று மட்டும் இல்லாமல் அனைத்து விதமான இயக்குனர்களோடும் பணியாற்ற ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார். தன்னுடைய 51 ஆவது வயதில் கம்பேக் கொடுத்துள்ள பிரசாந்த் நடிப்பில் அடுத்து விஜய்யின் கோட் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments