Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தாதூன் ரீமேக்: பிரசாந்த் உடன் காமெடியில் கலக்க போகும் யோகி பாபு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (08:03 IST)
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார்.

மியூசிக் திரில்லர் படமான இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்றும் இந்த படத்தின் ஹீரோவே பியானோ இசைக் கலைஞர் என்பதால் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும் தியாகராஜன் கருதியுள்ளார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த படத்தில் கள்ள காதலனுக்காக கட்டின புருஷனையே கொள்ளும் கொடூர வில்லியாக நடிகை தபு நடித்திருப்பார். அது படத்தின் கதைக்கு முக்கிய ரோலாக அமைந்தது. இந்நிலையில் தபு ரோலில் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்கிறார் என்பது வெளியாகவில்லை. ஆனால்,  தபுவின் கணவராக நடிகர் கார்த்திக் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் யோகி பாபு இப்படத்தில் காமெடியனாக ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments