Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பட தயாரிப்பாளர் ஒரு முக்கிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:40 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிங் நிறுவனம் நேற்று  கைப்பற்றியுள்ள நிலையில்,  இப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு ஒரு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையவுள்ளன.

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது படம் தியேட்டரில் வெளியாவது குறித்து தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து ஒரு டுவிட் பதிவிட்டிருந்தார். இதனால் படக்குழுவும், தியேட்டர் அதிபர்களும், ரசிகர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வரும் 2021 ஏப்ரலில் கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், கர்ணன் படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல திங்க் மியூசிக் பெற்றுள்ளதாக கர்ணன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கர்ணன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , நடிகர் தனுஷ் இதுகுறித்துத் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் நிச்சயம் பாடல்கள் பெரிதும் பேசப்படும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் டப்பிங்கி நடிகர் தனுஷ் தனது பெஸ்ட் டப்பிங்கை முடிந்துக் கொடுத்துள்ளதாகவும் தயாரிப்பாளர் எஸ்.தாணு   புகழாரம் சூட்டியுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

டப்பிங்கின் போது, தனுஷ் டீ சர்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments