Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பீதி… வீட்டுக்குள் முடங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (15:50 IST)
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தன்னை வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டு இது மூன்றாவது வாரம் . இதுவரை கிட்டத்தட்ட 150 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பரவலைத் தடுக்கும் விதமாக பலரும் தங்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.


அதுபோல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் தன்னை மார்ச் 30 ஆம் தேதி வரை  வீட்டுக்குள் தனிமைப்படுத்தப் படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்களையும் அதுபோல வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments