Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப் மீண்டும் தமிழ்ப்படத்தில் நடிக்கின்றாரா? பரவும் வதந்தி!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (22:19 IST)
எஸ்ஜே சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ’உயர்ந்த மனிதன்’. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் தொடங்கியது. ஆனால் இந்த படத்தில் அமிதாப் ஒரு காட்சியில் நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதை மற்றும் படமாக்கும் திறனில் தனக்கு அதிருப்தி இருந்ததாக அமிதாப் தெரிவித்ததாகக் கூறப்பட்டது
 
எனவே இந்த படம் கிட்டத்தட்ட டிராப் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் அமிதாப் நடிக்க உள்ளதாக ஒரு சிலரால் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. உயர்ந்த மனிதன் படமே டிராப் என்ற நிலையில் இன்னொரு தமிழ் படத்தில் அவர் எப்படி நடிப்பார் என்ற அடிப்படை கூட இல்லாமல் இந்த வதந்தியை ஒரு சிலர் கிளப்பி வருகின்றனர். மொத்தத்தில் தமிழ் படத்தில் அமிதாப் நடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது 
 
அது மட்டுமின்றி அமிதாப் நடிக்க இருந்த உயர்ந்த மனிதன் படம் டிராப் ஆகாமல் மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அமிதாப் நடிக்கவிருந்த வேடத்தில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments