Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னையும் பாலாவையும் பிரித்தது எது ? – அமீர் உருக்கமான பேச்சு !

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (09:31 IST)
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் எல்லாத்தயும் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அமீர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

விஜயகாந்தின் நீண்டகால நண்பரான ராவுத்தரின் ராவுத்தர் பிலிம்ஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லாத்தயும் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமீர் சினிமாப் புகழின் நிலையற்ற தன்மைக் குறித்துப் பேசினார்.

அப்போது’ விஜய்காந்த் மதுரையில் சினிமா ஆசையில் சுற்றிக் கொண்டு இருந்தபோது அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவரை ஒரு நட்சத்திரமாக மாற்றியது ராவுத்தர்தான். ஆனால் அவர்கள் இருவரும் கடைசி வரை நண்பர்களாக இருந்தார்களா என்ன?.. அவர்களைப் பிரித்தது எது ?.. இந்த சினிமாதான். அதேப் போல நானும் பாலாவும் ஒன்றாகதான் சென்னைக்கு சினிமா வாய்ப்புத் தேடி வந்தோம். இப்போது நாங்கள் ஒன்றாகவா இருக்கிறோம். அவர் செல்போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. என்னுடையதும் அவரிடம் இருக்காது. எங்கள் நட்பைப் பிரித்தது சினிமாதான்’ என உருக்கமாகப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments