Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சார் நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு நான் கேள்விப்பட்டேன்… இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனின் லேட்டஸ்ட் பதிவு!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (14:50 IST)
நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் அஜித் குமார் சம்மந்தமாக ஒரு பதிவை வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

அவரது பதிவில் “இது அஜித் சாருக்கான பதிவு. நான் நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா மூலமாக நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக அறிந்தேன். இது பிரேமம் படத்துக்குப் பிறகு நீங்கள் நிவின் பாலியை உங்கள் வீட்டுக்கு அழைத்து பேசியதற்கு பிறகு நடந்தது. ஆனால் அதன் பிறகு உங்களை நான் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பார்க்கவே இல்லை.  ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதை மறந்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்றும் இல்லை என்றால் நீங்கள் ஒரு கடிதம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால் நான் உங்களை நம்புகிறேன். அதுபோல பொதுமக்களும் உங்களை நம்புகிறார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments