Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்போன்ஸ் புத்ரனால் 2 கோடி நஷ்டமடைந்த தயாரிப்பாளர்?

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (07:30 IST)
நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டது. படத்தில் இளையராஜா இசையில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆனால் இப்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

இதன் மூலம் இந்த படத்தைத் தயாரித்து வந்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு இந்த படத்தை வேறு இயக்குனரை வைத்து தொடங்கலாமா அல்லது அப்படியே விட்டுவிடலாமா என்ற யோசனையில் அவர் உள்ளதாக சொல்லப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் அல்போன்ஸ்  வெளியிட்ட பதிவில் “எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரையரங்குகளுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்ள போகிறேன்.” என அறிவித்தது பரபரப்பைக் கிளப்பியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments