Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ருதிஹாசனுடன் நடிக்க போட்டிப் போடும் நடிகர்கள்

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2014 (11:39 IST)
ரேஸ் குர்ரம் வெற்றிக்குப் பிறகு ஸ்ருதியை தங்கள் படத்தின் ஹீரோயினாக்க தெலுங்கின் முன்னணி நடிகர்கள் போட்டி போடுகின்றனர். ஸ்ருதியின் வெற்றிதான் இப்படி அவர்களை மாற்றியுள்ளது.
ஸ்ருதி நடித்த முதல் படம் லக், தமிழில் நடித்த முதல் படம் 7 ஆம் அறிவு இரண்டுமே தோல்விப் படங்கள். தெலுங்கிலும் அப்படியே. இந்த ஆரம்ப துரதிர்ஷ்டம் கப்பார் சிங் படத்தில் விலகியது.
 
பதினோரு வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பவன் கல்யாணுக்கு கப்பார் சிங் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிதான். அதேபோல் ராம் சரண் தேஜாவுக்கு ஸ்ருதியுடன் நடித்த யவடு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரேஸ் குர்ரம் அல்லு அர்ஜுனுக்கு அடித்த ஜாக்பாட். வெளிநாடுகளில் அவரின் எந்தவொரு படமும் ரேஸ் குர்ரம் அளவுக்கு வசூல் செய்ததில்லை. இந்த மூன்று நடிகர்களின் கரியர் கிராஃப் ராக்கெட் வேகத்தில் ஏறியதுக்கு ஸ்ருதியுடன் நடித்தப் படங்களே காரணம். சென்டிமெண்ட் மிகுந்த சினிமாவில் இது போதாதா?
 
ஸ்ருதிதான் ஹீரோயினாக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாம் தெலுங்கின் முன்னணி நடிகர்கள்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments