Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மீண்டும் உருவாகிறது சந்திரமுகி 2 !

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (16:44 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 2007 ஆம் ஆண்டு இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டநிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

ரஜினி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானப் படம் சந்திரமுகி. பாபாவுக்குப் பின்னர் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் ரஜினி நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை இந்தியில் 2007 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்தார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அக்‌ஷய் குமார், வித்யா பாலன், அமிஷா பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அங்கேயும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தைத் தயாரித்த பூஷண் குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க இருக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பிரியதர்ஷனிடமே இரண்டாம் பாகத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த அக்‌ஷய் குமார், அமிஷா படேல், வித்யா பாலன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!

அடுத்த கட்டுரையில்
Show comments