Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் அக்‌ஷய் குமார்… இந்த முறை மலையாள ஹிட் படம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:14 IST)
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்ற மொழிகளில் ஹிட்டாகும் படங்களை எல்லாம் ரீமேக் செய்து வரிசையாக நடித்து வருபவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்த திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். மறைந்த இயக்குனர் சாச்சி திரைக்கதை எழுதி பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். ஒரு உச்ச நட்சத்திரத்துக்கும் அவரின் தீவிர ரசிகரான டிராபிக் இன்ஸ்பெக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலே படத்தின் கதை. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தெலுங்கில் இந்தபடத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதே போல இப்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிருத்வி ராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், சுராஜ் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஸ்மியும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அக்‌ஷய் குமார் ஏற்கனவே சூரரைப் போற்று ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments